Sunday, January 03, 2010

வாழ்க்கை தகவல்கள்

தகவல்கள்.

01. அன்பை வாழ்க்கைக்குள் புகுத்துவது கடவுளைப் புகுத்துவதற்கு சமமானது. தேநீர் அருந்துவது, உணவு உண்பது, குளிப்பது போன்ற சாதாரண அன்றாட செயல்களிலும் அன்பின் சக்தியை கலந்திடுங்கள்.

02. பழைய எண்ணங்களையே நினைத்துக் கொண்டிருந்தால் வலியும், வெறுப்பும் தொடரும் அவற்றில் நல்ல பாடம் கற்றுக்கொண்டு அவற்றை அடியோடு மறந்துவிடுங்கள்.

03. அமைதியும் ஆனந்தமும் உங்களுக்குள்தான் இருக்கிறது. இதை வெளியில் தேடினால் காக்கையிடம் பற்கள் இருக்கிறதா என்று தேடுவதைப் போல பயனற்ற செயலாக அமையும்.

04. அன்பு செலுத்த பேராசைப்படும்போது உருவாவது காமம் ! உங்களுடைய உள் வெற்றிடத்தில் மற்றவரை நிரப்பும்போது உண்டாவது காதல் ! இதுவே காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு.

05. சம்பவங்களில் எது பெரியது எது சிறியது என்று அகந்தை மனது தீர்மானிக்கிறது. ஆனால் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமே சம்பவங்கள்தான் அதில் பெரிது சிறிது என்று எதுவுமே கிடையாது.

06. வாழ்க்கை எப்போதும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. அதுபோலவே அன்பும் புதியதாகவே இருக்கும். அகந்தையுடைய மனதுதான் எப்போதும் பழையதாக இருக்கும்.

07. ஆசைப்படுவதற்கு அடிப்படைக் காரணம் உண்மையை உணராமல் இருப்பது. இந்த அறியாமைதான் பிரச்சனை. இந்த அறியாமை வாழ்க்கையை எப்படிப் பாழாக்குகிறது என்பதை அறிந்து விழிப்படைவது அவசியம்.

08. உலகத்தில் இருப்பவை எல்லாம் நம்மை பராமரித்து அன்பு செலுத்துகின்றன. இந்தப் பராமரிப்பு இல்லாமல் உலகத்தில் இருப்பது நம்மால் முடியாது.

09. பாசக்குட்டையில் தேங்கிவிடாதீர்கள் கடவுளின் அன்பில் நதியாக பாய்ந்து கொண்டிருங்கள்.

10. சோதனைகளை எல்லாம் ஒருவர் வலி தருவது என்ற நோக்கோடு பார்த்தால் அவர் வாழ்க்கை முழுவதும் வலியைத்தான் அனுபவிப்பார்.

11. மனிதன் என்பவன் சக்தியின் பொதிவு. இந்த சக்தியை உருமாற்றம் செய்து வாழ்க்கையை சந்திக்க வேண்டும். உருமாற்றம் பெறாத சக்தி உள்ளத்தில் வலிகளைத்தான் உருவாக்கும்.

12. உடலில் வலி ஏற்பட்டால் மருத்துவரை பார்க்கச் செல்கிறோம், நோயை மாற்றுகிறோம், அதுபோல மனதில் வலி ஏற்பட்டால் பாதையை மாற்று என்ற எச்சரிக்கை வந்துவிட்டதாக பொருள் கொண்டு புதிய பாதையில் கால் பதி.

13. கேள்வி : யார் விவேகமுள்ள மனிதன் ?
பதில் : பொருட் செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பவன். நம்பிக்கைகள், ஆசைகளுக்கு அடிமையாகாமல் இருப்பவன். வலியை வலிமையாக மாற்றும் வல்லமை படைத்தவன்தான் விவேகமுள்ளவன்.

14. தன்னிடம் இருப்பது பற்றிய சந்தோஷத்தை அறியாதவன்தான் இழப்பது பற்றிய அச்சத்தில் வாழ்கிறான். சாவைப்பற்றி கவலைப்படும் அனைவரும் வாழ்வைப்பற்றி கவலைப்படுபவர்களே.

15. உங்களிடம் இருப்பதெல்லாம் கடவுளின் வெகுமதி உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் விருப்பம்.

16. அழகை அது எப்படி உள்ளதோ அப்படியே காண வேண்டுமே தவிர, அது எப்படி இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் காணக்கூடாது.

17. சாதாரண மனிதன் அகந்தையின் இருளிலும், பிடியிலும் வாழ்கிறான். அவன் அகந்தையின் பிணைக்கைதி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வீணானதுதான்.

18. வாழ்க்கையின் உன்னதமான இலட்சியமே உள்ளுக்குள்ளேயே ஒரு உன்னதமான கதிரவன் உதயமாவதைக் காணும் வாய்ப்பை தேடிப்பெறுவதுதான். வாழ்வில் மேன்மை பெற்ற மனிதர்கள் இதைத்தான் தேடினார்கள்.

19. உன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டு தேவையானதைத் தேடிச் செல்வது விரிவடைந்த புத்திசாலித்தனத்தின் அடையாளம்.

20. செயல்களை பேராசையால் உருவாக்கலாம், புனித எண்ணங்களால் உருவாக்கலாம். இதில் பேராசையால் உருவாக்கும் எண்ணங்கள் அறியாமையை மேலும் ஆழமாக்கும்.

21. கேள்வி : கடவுளைக்காண என்ன உபகரணம் இருக்கிறது ?
பதில் : முதலில் கடவுளின் எல்லையற்ற கருணையை அடையாளம் காண வேண்டும். அதற்காகவே உன் பெற்றோர், சூரியன், சந்திரன், உன்னிடம் உதை வாங்கியும் உணவு தரும் உன்மனைவியின் கருணை என்று பல உபகரணங்களை தந்துள்ளான்.

22. வாழ்க்கையை அளவிட நீளம் அல்ல அளவு கோல் அதன் ஆழம்தான் அளவுகோல். எத்தனையோ ஞானிகள் முப்பது வருடங்கள் கூட புவியில் வாழவில்லை நீளத்தால் அளவிட்டால் அவர்கள் தோல்வியாளாகளே.

23. ஒரு பிள்ளை பொய் சொல்லப் பழகினால் அந்தப் பிள்ளையை உயிருடன் பார்ப்பதைவிட பிணமாகப் பார்ப்பது பெருமை தரும்.

24. ஆசைகளை நிறைவேற்ற நிறைவேற்ற புதிய ஆசைகள் தோன்றிய வண்ணமே இருக்கும். ஆகவே அவற்றை கடந்து நிற்கப் பாருங்கள்.

25. வாழ்க்கை என்பது இறங்குமுகமோ ஏறுமுகமோ அல்ல அது ஆண்டவனின் விளையாட்டு.

No comments:

Post a Comment