Sunday, January 30, 2011
பிறக்கப்போகும் குழந்தை ஆணா?? பெண்ணா???
Saturday, January 29, 2011
அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது -12 ராசிகளுக்கும்
- அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது
- குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், புத்தகம் வெளியிடுதல், புண்ணியத் தலங்களுக்குச் செல்தல், வீடு, மனை, கிணறு போன்றவைகளைச் சீர்திருத்தம் செய்யலாம்.
அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்நாளில் வாழ்வின் திருக்காரியங்களுக்குப் பயன்படும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அட்சய திருதி - பன்னிரண்டு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது.
Friday, January 28, 2011
பயனுள்ள தொழில்கள் 1 - கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
கொட்டகை முறை கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம். பயன்கள்
ஆழ்கூள முறை இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும். பயன்கள்
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.) தனிமையில் வளர்த்தல் வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும். கோழிகள் கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம். கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை இந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். இருக்க வேண்டிய எண்ணிக்கை கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும். |
Wednesday, January 26, 2011
வாக்காளர்களே.... புதுச்சேரி வாழ் மக்களே...
வாக்காளர்களே....
புதுச்சேரி வாழ் மக்களே....இதன் மூலம் உங்களுக்கு தெரிவிக்கறது என்னவென்றால்..ல்ல்ல்ல் நம்ம ஊர் புதிய வாக்காளர் பட்டியல் 2011 ஐ தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டு இருக்காங்கோ......நம வீட்டுல இருந்தே சரி பார்த்துக்கலாமுங்கோ... அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம்......
கீழ இருக்கற லிங்க தட்டுங்கோ.....
Tuesday, January 25, 2011
Monday, January 24, 2011
உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்
Sunday, January 23, 2011
வீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறை
வீடு கட்ட சரியான மாதங்கள்
தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உகந்த மாதங்கள்.
வாஸ்து புருஷன்
இந்த 3 3/4 நாழிகையில் வாஸ்து புருஷன்
1. பல் துலக்குகிறார்
2. நீராடுகிறார்.
3. பூஜை செய்கிறார்
4. உணவு உண்கிறார்.
5. தாம்பூலம் தரிக்கிறார்.
- இதில் உணவு உண்ணும் காலமும் தாம்பூலம் தரிக்கும் காலமும் கொண்ட 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில் (36நிமிடம்) வாஸ்து செய்வது மிகவும் சிறப்பானது என்கிறது சோதிடம்.
- சித்திரை 10 ஆம் தேதி - காலை மணி 8.54 முதல் 9.30 மணி வரை
- வைகாசி 21 ஆம் தேதி - காலை மணி 9.58 முதல் 10.34 மணி வரை
- ஆடி 11 ஆம் தேதி - காலை மணி 7.44 முதல் 8.20 மணி வரை
- ஆவணி 6 ஆம் தேதி - காலை மணி 7.23 முதல் 7.59 மணி வரை
- ஐப்பசி 11 ஆம் தேதி - காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை
- கார்த்திகை 8 ஆம் தேதி - காலை 11.29 முதல் மதியம் 12.05 மணி வரை
- தை 12 ஆம் தேதி - காலை 10.41 முதல் 11.17 மணி வரை
- மாசி 22 ஆம் தேதி - காலை 10.32 முதல் 11.08 மணி வரை
- சித்திரை,வைகாசி, பங்குனி மாதங்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
- ஆடி, ஆவணி மாதங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
- ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தெற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
- தை, மாசி மாதங்கள் மேற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.
6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 43, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119, 120 போன்ற அடிகளில்தான் நீளம், அகலம் இருக்க வேண்டும்.
- வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.
- வீட்டுக்குக் காலியிடம் அமைத்தால் அது வீட்டுக்கு வடக்கு, கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும்.
- கழிவு நீரை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.
- வாசல்படிகள் ஒற்றைப்படியில் அமைக்க வேண்டும். இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறும்படி அமைப்பது சிறப்பு.
- வீட்டின் மேல் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் போது வீட்டின் கன்னி மூலையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.
- வீட்டிற்கு வெளியில் இருக்கும் சாலையின் மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.
- கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவைகளை கிழக்கு அல்லது மேற்கில் அமைக்க வேண்டும்.
- வீட்டில் சமையலறை தென்கிழக்கில் கிழக்கு நோக்கி சமையல் செய்யும்படியாகவும், உணவு உண்ணும் அறை தெற்கிலும், படுக்கையறை மேற்கிலும், பூஜையறை வடகிழக்கிலும், குளியலறை கிழக்கிலும் அமைக்கப்படுவது நல்லது.
- வீட்டின் அருகில் மா, வாழை, வேம்பு, எலுமிச்சை மரங்கள், மல்லிகைச்செடி வளர்க்கலாம்.
- வீட்டின் அருகில் ஆலம், பனை, எருக்கு, எட்டி, வில்வம், முருங்கை, இலுப்பை மரங்களையும் பப்பாளி, அகத்தி போன்ற செடிகளையும் வளர்க்கக் கூடாது.
- தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் நல்லது.
- ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் நல்லதல்ல.
- திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் நல்லது.
- கதவு போடாமலும், கூரை வேயாமலும், தரை, சுவர் பூசாமலும், வேள்வி, பிராமண போஜனம் செய்யாமலும் கிருஹப்பிரவேசம் செய்யக் கூடாது.
கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.
-
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
-
சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
-
எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
-
எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
-
எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
-
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
-
சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
-
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
-
எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
-
எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
-
எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
-
எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
-
எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
-
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்
மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!
மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!
மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது.
குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்த ஜோதியை உருவாக்குவதில் தேவசம் போர்டுக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.
பழங்காலத்தில், காட்டுவாசிகள் மகரவிளக்கு விழாவினை பொன்னம்பலமேடு பகுதியில் கொண்டாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது பொன்னம்பலமேடுவில் ஜோதியை ஏற்றி மகரவிளக்கு விழாவைக் கொண்டாடுவார்கள். காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட பின்னரும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது என்றும் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.
பன்டலம் அரண்மலை மேலாண்மைக் குழுத் தலைவர் ராமவர்மா ராஜா மற்றும் கோயிலின் தலைமைப் பூசாரி கன்டரராரு மகேஷ்வரரு ஆகியோரும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.
மகரவிளக்கு நாளின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு மேல் மலை உச்சியில் தென்படும் நட்சத்திரத்தின் ஒளிதான் மகரஜோதி என்றும் தற்போது பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் ஜோதி மகரஜோதி அல்ல என்றும் தலைமைப் பூசாரி கூறியுள்ளார்.
பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகரஜோதி மனித தயாரிப்பு என்பது உண்மை என்றாலும் அது நம்பிக்கை சார்ந்தது என்று ஐயப்பா சேவா சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.
மகரஜோதி மனித தயாரிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஐயப்ப பக்தர்களின் மனதில் புனிதம் பெற்ற நிகழ்வாக இடம்பெற்றுவிட்டது என்று இந்து ஐக்கியவேதி அமைப்பின் பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
மகரஜோதியும் பொன்னம்பலமேடும் சபரிமலை கோயிலின் அடிப்படையான இடம் என்று கருதப்படுகிறது. இவை ஆழ்ந்த மத நம்பிக்கையின் உண்மைப் பகுதிகள். பொன்னம்பலமேடுவில் சிமெண்ட் தரையைக் கட்டியது திருவாங்கூர் தேவசம் போர்டுதான் என்றும் ராஜசேகரன் கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் அறிவிற்குட்பட்டு தேவசம்போர்டால் கட்டப்பட்டதே இந்த இடம் என்றும் கூறியுள்ள ராஜசேகரன், புல்மேடு விபத்திலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக சிலர் மகரஜோதி குறித்து பிரச்சனைகளை எழுப்புகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொன்னம்பலமேடுவில் மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்படும் இடம் 1990களில் திருவாங்கூர் தேவசம் போர்டால் கட்டப்பட்டது. இந்தப் புகைப்படம் உரிய அனுமதி பெற்று 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி : இந்நேரம்.காம்
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு (Essential USB Applications AIO)
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு
This is a collection of all necessary tools for your USB/ pendrive check out the screenshots, you'll know what I'm talking about.
பதிவிறக்க :
hugedrive.com/published/WG/show.php?q=TElOT0o=-47daa06e&mode=preview&file=NjA=
ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை
ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.
1956
ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.
1961
ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.
1961
பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.
1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.
1966
புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.
1971
ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.
1973
நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.
1975
ஐ.பி.எம். 62 ௲ ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.
1976
43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.
ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.
1979
பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.
ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.
1980
முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.
1981
சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.
1983
ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.
1986
அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.
1988
கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.
1992
ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.
1993
முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.
1996
மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.
1997
ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.
1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.
2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.
2002
பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.
2005
ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.
2006
நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.
Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.
2007
முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.
2008
லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.
2009
வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.
வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.
Source: கணணி செய்திகள்
கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு {Top 10 most nasty food dishes around the world}
கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு
{Top 10 most nasty food dishes around the world}
------------------------------------------------------------------------------------------------
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ,கலாசாரத்திற்கும் பல வகையான உணவு பழக்க வழக்கங்கள் உண்டு,அவைகளில் சில நம் கற்பனைக்கு எட்டாத , பெரும்பாலோர்க்கு பிடிக்காத {அ} மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு வகைகள் இதோ !!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------
10. வாத்து நாக்குகள் . இது ஹாங்காங் நாட்டில் பிரபலமான ஒன்று
9. புழுக்கள் நிரம்பிய லாலிபாப் . இதில் மண்புழுக்களும்,வெட்டுக்கிளிகளும் ஓட்ஸ் உடன் சேர்த்து தயாரிக்கபடுகிறது
8. ஹாகிஸ் –இதை பார்ததும் காய்கறி போல தோன்றும் . ஆனால் இது ஆட்டின் இதயம் ,நுரையீரல் ,கல்லீரல் உடன் வெங்காயம் ,ஓட்ஸ், மசாலா சேர்த்து செய்யப்படும் உணவு .
7. டீப் ஃப்ரைடு மார்ஸ் . ஸ்காட்லாண்ட் நாட்டின் உணவு , இதில் எண்ணை நிரப்பி மீன் உடன் சேர்த்து கொடுப்பார்கள் .
6. டிக்கர் அரிசி ரொட்டி . ஜப்பானின் அரிசி ரொட்டி பூச்சிகளோடு அரிசி மாவு சேர்த்து செய்கிறார்கள் .
5. சிலந்தி வறுவல் . சிலந்திகளை மொருமொருவென வருது தரும் பெருமை கம்போடியா நாட்டிற்கே உண்டு .
4. ஸ்டஃப் பாம்பு அண்ட் பொடி . இது சீனா ஸ்பெஷல் . பாம்பின் உள் மசாலா ,ஓட்ஸ் ஸ்டஃப் செய்து கொடுப்பார்கள் + பாம்பை டீப் ஃப்ரை செய்து அரைத்த பொடி .
3. கடல்குதிரைக் குச்சி . சீனா ஸ்பெஷல் ,. கடல்குதிரைகளை வறுவல் ,இதன் விலை மிக அதிகம் ,காஸ்ட்லி உணவாம்
2.பச்சை ரத்த உணவுகள் . தென்கிழக்கு ஏஷியாவில் இது பிரபலமானது . பொதுவாக வாத்து மற்றும் பன்றி ரத்தத்தை பிற குடல்களுடன் சேர்த்து செய்யபடுகிறது
- கினியா பன்றி வறுவல் . பெரு நாட்டில் பன்றி திருவிழாவில் , கினியா பன்றிகளை முழுதாக ஃப்ரை செய்கிறார்கள் . இது அவர்களின் கலாசார உணவாம் .
ஐயோ சாமி முடியல !!!!!!!!