Friday, February 11, 2011

அட அப்படியா...?-படங்களுடன்

அட அப்படியா...?-படங்களுடன் 
  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும் 


  • கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

  • தீக்கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.

  • பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

  • Grizzly Bear, என்கிற கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

     



     
  • அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் வரை இருக்கும்.நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.



  • தெள்ளுப் பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தைப் போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

  • நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.

  • தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி விட்டன.ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனைச் சேகரிக்கிறது.



  • Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்து விட்டு அதன் எடையைக் கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 
  • விலங்கினகளில் Cat Fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.
     உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.



  • அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் இருக்கிறது  
  • வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.

  • உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதான். தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம்!

  • உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதான்.

  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment