Tuesday, March 01, 2011

பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்

பெங்குவினின் வாழ்வியல் முறைகள்

 
ஜனவரி முதல் மார்ச்    --- உணவு வேட்டை ,அதன் மூலம் அதன் இனபெருக்க காலத்திற்கு தேவையான சக்தியை சேமித்தல்.
 

ஏப்ரல்  மாதம்   ---- இந்த ஒரு மாத காலத்தில் , கடற்கரை பகுதிகளில் இருந்து முட்டை இடுவதற்கு பாதுகாப்பான இடம் நோக்கி நகர்தல்.

மே மாதம் ---- கலவியில் ஈடுபடுதல் 




ஜூன் முதல் ஜூலை ---முட்டைகள் ஈனும் பருவம் மற்றும் ஆண் பெங்குவின்கள் முட்டையை அடை காத்தல்.இந்த கால கட்டத்தில் பெண் பெங்குவின்கள் உணவை தேடி சென்று விடுகின்றது .




ஆகஸ்ட் மாதம் --- முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வரும் பருவம்,இந்த நேரத்தில் உணவை தேடி சென்ற பெண் பெங்குவின்கள் திரும்ப ஆரம்பிக்கிறது.




செப்டம்பர் முதல் அக்டோபர் ---- குஞ்சுகளுக்கு உணவு தருதல் ,முதற்கட்ட வளர்ச்சி தொடங்குகிறது .

அக்டோபர் முதல் நவம்பர் ---- குஞ்சுகள் அனைத்தும் குழுவாக இணைந்து வெப்பத்தை உருவாக்கி கொள்கின்றன. 

டிசம்பர் மாதம் --- குஞ்சுகளை விட்டு பெங்குவின்கள் பிரிந்து சென்றுவிடுகிறது .இந்த நேரத்தில் பனிக்கட்டிகள் உடைந்து நீரை உண்டாக்குகின்றன ,குஞ்சுகள் அதன் வளர்ச்சியையும், உணவையும் தானே அடைகின்றன .  
 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment