Friday, July 02, 2010

கருவாட்டு குழம்பு - two types

தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு


• தேங்காய்பால் - 2 கப்
• புளிக்கரைசல் - கால் கப்
• வஞ்சிரம் கருவாடு - 50 கிராம்
• கத்திரிக்காய் - 2
• உருளை அல்லது வாழைக்காய் - ஒன்று
• மாங்காய் - ஒன்று
• முருங்கைக்காய் - ஒன்று
• வெங்காயம் - 2
• தக்காளி - 3
• பச்சைமிளகாய் - 2
• கறிவேப்பிலை - சிறிது
• காய்ந்த மொச்சை - அரை கப்
• எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• தனியா பவுடர் - 2 மேசைக்கரண்டி
• உப்பு - சுவைக்கு


உருளை அல்லது வாழைக்காய், தோல் சீவிய மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை 1 1/2 இஞ்ச் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கருவாட்டை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி சுத்தம் செய்த கருவாட்டுத் துண்டுகளை போட்டு கிளறவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து கிளறி விடவும்.
இந்த கலவையுடன் புளிக்கரைசலை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகும்படி கலக்கி விட்டி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய்பால் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
வெறும் வாணலியில் மொச்சையை போட்டு வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து வடிகட்டி அதை குழம்பில் சேர்த்து கிளறி விடவும். மேலும் சிறிது நேரம் சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
சுவையான தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு ரெடி. இது ப்ளைன் சாதம், சப்பாத்தி, கோதுமை தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு ஏற்றது. அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள கருவாட்டுக் குழம்பு. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கருவாட்டில் உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவான உப்பே போதுமானது.


கத்தரிக்காய் கருவாட்டு குழம்பு

ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 40 நிமிடம்
பரிமாறும் அளவு : 4


• கத்தரிக்காய் - கால் கிலோ
• காராமணி (அ) ராஜ்மா - ஒரு கப்
• கருவாடு - கால் கிலோ
• வெங்காயம் - 200 கிராம்
• பச்சை மிளகாய் - 3
• இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
• கடுகு - ஒரு தேக்கரண்டி
• வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
• மிளகு தூள் - 2 தேக்கரண்டி
• சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
• எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
• புளி - ஒரு எலுமிச்சை அளவு
• மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
• தனியா தூள் - 3 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
• உப்பு - தேவையான அளவு

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். கத்தரிகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்
• எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்கயாம் சேர்த்து வதக்கவும்.
• பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
• கத்தரிக்காய் மற்றும் காராமணியை சேர்த்து வதக்கி கருவாட்டையும் சேர்க்கவும்.
• தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.
• உப்பு, கீறின பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
• இறக்குவதற்கு முன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.