Saturday, January 02, 2010

சுறுசுறுப்பை உண்டாக்கும் ஆப்பிள்

சுறுசுறுப்பை உண்டாக்கும் ஆப்பிள்.

உலகம் முழுவதிலும் ஆப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்கண்டினேவிய நாட்டவர்கள் அப்பிளை "கடவுளின் உணவு" என்கின்றனர். நாள்தோறும் ஒரு ஆப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும் என்பது ஆங்கில மொழி.

ஆப்பிள் பழத்தில் என்ன சத்துக்கள் இல்லை. உடலை வளர்க்கும் விற்றமின்களும் உடலியல் செயல்களை ஊக்குவிக்கும் தாதுப் பொருட்களும் உடல் உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயற்பட உதவும் நுண்ணூட்டச் சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் அப்பிளில் தங்கியுள்ளன.

ஆப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆப்பிள் பழம் மட்டுமல்ல அதனுடைய இலைகளும், விதைகளும், வேர்ப்பகுதியும், வேர்ப்பட்டடையும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டதாகும்.

அழகிய சிவப்பு நிறத்தில், பளபளப்பாக, கண்ணைப் பறிக்கும் விதத்தில் காணப்படும் அழகான பழம் ஆப்பிள் பழமாகும். அழகு இனிமை, மென்மை என்பவற்றிற்கும் ஆப்பிளுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. தங்கப் பழம் என்று புகழப்படும் ஆப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும்.

ஆப்பிள் பழத்தின் பிறப்பிடம் மத்திய ஐரோப்பா மற்றம் மேற்கு ஆசிய நாடுகளாகும். உலகம் முழுவதிலும் 6500க்கும் மேற்பட்ட வகைகளில் ஆப்பிள்கள் காணப்படுகின்றன. இவ்வாறான அரிய பல தகவல்களை வழங்கியுள்ளது மருத்துவ ஆய்வுப் பொத்தகம்

குறிப்பு:
ஆப்பிள் பழத்தை தமிழில் சீமை இலந்தை என்று அழைப்பர்.

நன்றி:கயல்விழி-பதிவு

No comments:

Post a Comment