Friday, October 22, 2010

சென்னை சிறப்பு

சென்னை

இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.

பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 70 லட்சம்.
உயரம் : கடல் மட்டம்
மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி).
பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.

சென்னை வரலாறுHotel image
சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.


தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.


தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.


சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.


இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.


சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.


செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.

வரலாற்றில் சென்னை

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.


சென்னையின் பூகோள மற்றும் சீதோஷ்ண நிலை:

Hotel image

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்ற�ப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.


மக்கள் தொகை

சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.


சென்னை பொருளாதாரம்

சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்�யை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.


சென்னை சுற்றுலா

அண்ணா நகர் கோபுரம்:
Hotel image
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.

பிர்லா கோளரங்கம்:
Hotel image
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு ரூ.10.

கன்னிமாரா பொது நூலகம்:
Hotel image
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.

அரசு அருங்காட்சியகம்:
Hotel image
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.

எலியட்ஸ் கடற்கரை:
Hotel image
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.

மெரினா கடற்கரை:
Hotel image
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.

நேப்பியர் பாலம்:
Hotel image
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
Hotel image
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன.

கோட்டை அருங்காட்சியகம்:
Hotel image
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.

ஐகோர்ட்:
Hotel image
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில் அமைந்துள்ளது

எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
Hotel image
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..

டைடல் பார்க்:
Hotel image
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.

சாந்தோம் பாசிலிகா:
Hotel image
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம் அமைந்துள்ளது.

விவேகானந்தர் இல்லம்:
Hotel image
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வøக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

கிண்டி தேசிய பூங்கா:
Hotel image
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.

அஷ்டலட்சுமி கோயில்:
Hotel image
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கபாலீஸ்வரர் கோயில்:
Hotel image
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமாøன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா குறிப்பிடத்தக்கது.


சென்னை மருத்துவமனை


அமர் மருத்துவமனை
154, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை- 600010;
போன்: 91 44 28256073)

அகஸ்தியர் சிட்சாபாய் மருத்துவமனை
152/ 1 ரங்கராஜபுரம் சாலை, சென்னை- 600024;
போன்: 91 44 24728098

அட்வான்ஸ்டு நியூக்லியர் மருந்து ஆராய்ச்சி கழகம்
எண்.12, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை- 600084 ;
91 44 26612794

அதிபதி நர்சிங்ஹோம்
பிளாட் எண்.1, 110 அடி சாலை, டான்சி நகர், சென்டன- 600042;
போன்: 91 44 22430819

அக்குபஞ்சர் மருத்துவ கிளினிக்
49, பாக்கர் தெரு, புரசைவாக்கம் மலர் சாலை, சென்னை- 600084;
91 44 26412438

அபிஜெய் மருத்துவமனை
22/2, ஈ.எஸ்.ஐ., மருத்தவமனை சாலை, பெரவள்ளூர்,சென்னை- 600011;
போன்: 91 44 25585322

ஆஷிமா மருத்துவமனை
1201, 6வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை- 600040;
போன்: 91 44 26285152

ஆலயா மருத்துவமனை
542-694, பி.எச்.,சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை- 600029;
போன்: 91 44 26641100

ஆகாஷ் மருத்துவமனை
395, டி.எச்., சாலை, திருவொற்றியூர், சென்னை- 600019;
போன்: 91 44 25730099

ஏ.வி.டி., மருத்துவமனை
1-சி, சி.ஐ.டி., காலனி, பி.என.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004;
போன்: 91 44 24996488

ஏ.வி.எம்., மருத்துவ ஈ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை
எண்.3, பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004;
போன்: 91 44 24970876, 24994597

ஏ.வி., மருத்துவமனை மற்றும் டயாக்னோஸ்டிக் சேவை
புதிய எண்.5/ பழைய எண்.8, சுந்தரராஜன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018;
போன்: 91 44 24997590

ஏ.வி., மருத்துவமனை
172, சோலையப்பன் தெரு, பழைய வண்ணார்பேட்டை, சென்னை- 600021;
போன்: 91 44 259550904

ஏ.கே., மருத்துவமனை
எண்.360, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை- 600029;
போன்: 91 44 23741123

ஏ.ஜி., மருத்துவமனை
8-சி, கக்கன் தெரு, தாம்பரம் (மேற்கு), சென்னை- 600045
91 44 2236550

ஏ.சி., மருத்துவமனை
எண்.8, யு.ஐ.நகர், சென்னை- 600023
91 44 26449989

24 மணி நேர விபத்து டிராமா கேர்
9. துரைசாமி நகர், தாம்பரம் (கிழக்கு), சென்னை- 600045
91 44 22790340, 22391576


சென்னை ஹோட்டல்கள்பிஷர்மேன் கோவ்

Hotel image
மு ன்பு டச்சு கோட்டையாக இருந்த இடம் தற்போது சொகுசு ஓட்டலாக உரப்பெற்றுள்ளது. 88 காட்டேஜ்களைக் கொண்ட இந்த ஓட்டலில் அனைத்து அளைகளிலும் இருந்து கடலைப் பார்த்தது ரசிக்கலாம். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தோட்டம் மற்றும் அமர்ந்து ரசிக்கும் இடம் என வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலயத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஒட்டல் பகுதியில் பனைமரங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள வர்த்தக மையத்தில் ஒயர்லஸ் இன்டர்நெட், கம்ப்யூட்டர் போன்ற வசதிகளும் 400 பேர் அமரத்தக்க மாநாட்டு மண்டபமம் உள்ளது.
Covelong Beach, Kanchipuram District 603 112 Tamil Nadu
(91-4114) 272304/5/6
www.tajhotels.com

சோழா ஷெரட்டான்:

Hotel image

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோழா ஷெரட்டான் ஓட்டல், சென்னையில் உள்ள சிறந்த 5 நட்சத்திர ஓட்டல்களில் இது ஒன்று. இந்திய சுற்றுலா கழகத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் ஓட்டலான இது விமான நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஓட்டலின் அருகேயே ஷாப்பிங் மற்றும் வர்த்தக மையங்கள் உள்ளன. இந்த ஓட்டலில் 33 சொகுசு அறைகள், 92 சாதாரண அறைகள், சூட்கள் மற்றும் 44 இரட்டை அறைகள் உள்ளன. இந்த இரட்டை அறைகளில் படுக்கை அறை தவிர பார்க்க வரு��ரைச் சந்திப்பதற்கான தனி இடமும் உள்ளது. வர்த்தகம் தொடர்பான சிறப்பான சேவையும் உள்ளது.

Cathedral Road, Chennai - 600 086;
Tel: (91-44) 2811 0101;
www.welcomgroup.com

தி டெரிடென்ட்:

Hotel image

சென்னை விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தி டிரிடென்ட் ஓட்டல், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், கிண்டி தொழிற்பேட்டை போன்ற வர்த்தக மையங்கள் அருகே அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த முதல் தர சர்வதேச ஓட்டலில் 167 அறைகள் உள்ளன. 375 பேர வரை அமரத்தக்க விருந்து மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்கள் உள்ளன.

முகவரி: /24, G.S.T. Road, Chennai 600 027;
Tel: (91) (44) 2344747

பார்க் ஷெரட்டென்:

Hotel image

நகரின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பார்க் ஷெரட்டான் ஓட்டல் அருகே நகரின் பிரதான வர்த்க மையங்கள் உள்ளன. கண்கவர் புல் வெளிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைந்துள்ள இந்த ஓட்டலில் 283 சொகுசு அறைகளும் 38 சூட்களும் உள்ளன. விமான நிலையத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஓட்டல் அமைந்தள்ளது. ஓட்டலில் தங்குவோரின் வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தொழில் மற்றும் வர்த்தக பணிகளைக் கவனிப்பதற்கான வசதிகள் 94 அறைகளில் உள்ளன.

132, T.T.K. Road, Chennai 600 018;
Tel: (91) (44) 24994101;
www.welcomgroup.com

தாஜ் கன்னிமாரா:

Hotel image

சென்னையில் பாரம்பரிய ஒட்டல்; அரண்மனை போல் தோற்றம் அளிக்கும் இந்த அந்த அளவிற்கு சேவையும் உண்டு. குளுகுளு வசதி கொண்ட 150 அறைகளும் 9 சூட்களும் கொண்ட இந்த ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

Taj Connemara, Binny Road Chennai - 600 002;
Tel: (91-44) 5500 0000;
www.tajhotels.com

தாஜ் கோரமண்டல்:

Hotel image

தென்இந்திய வடிவமைப்பும் ஐரோப்பிய கம்பீரமும் கொண்ட தாஜ் கோரமண்டல் ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த ஒட்டல், தொழில் அதிபர்களுக்கும் சற்றுலா பயணிகளுக்கும் ஏற்றது. அனைவரின் வசதிக்கும் ஏற்ற 205 அறைகளும் 22 சூட்களும் கொண்ட இந்த ஒட்டலில் 25 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாநாட்டு மண்டபங்களும் விருந்து மண்டபங்களும் உள்ளன.

Taj Coromandal 37, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai 600 034;
Tel: (91-44) 5500 2827;
www.tajhotels.com

லி ராயல் மெரிடியன்:

Hotel image

பல்லவர் காலத்து கட்டிட கலை நுட்பத்தையும் ஐரோப்பிய கம்பீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள லி ராயல் மெரிடியன் அரண்மனை ஒட்டலில் ஆயிரத்து 500 பேர வரை பங்கேற்கக் கூடிய நடன மண்டபம் உள்ளது. 240 அறைகளும் சூட்களும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஆயிரம் பேர் வரை பங்கேற்பதற்கு வசதியான விருந்து மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்களும் உள்ளன. விமான நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஓட்டல் உள்ளது.

1 GST Road, St Thomas Mount, Chennai, Madras, 600 016;
Tel: +91 44 2231 4343;

பிரீஸ்:
41. திருமலைப் பிள்ளை சாலை, தி.நகர், சென்னை- 600 017;
போன்: 26413334;


சென்னை ஹோட்டல்கள்
அபு பாலஸ்
926, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை- 600 084
2641222
www.hotelabupalacechennai.com

அம்பிகா எம்பயர்
72, நூறடி சாலை, வடபழனி, சென்னை- 600 026
23621818

அருணாச்சலா:

1, பார்த்தசாரதி சாலை, முத்தமிழ் நகர், சென்னை- 600 043;
போன்: 28213311;

டீ சீ மினார்:

87, ஜி.என்.செட்டி தெரு, தி.நகர், சென்னை- 600 017;

போன்: 28284411;

கவுதம் மனோர்:

72, மகாத்மா காந்தி சாலை, சென்னை- 600 034;

போன்: 28231885;

கிங்ஸ் பார்க்:

216/ 869, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.வெ,ரா பெரியார் சாலை, 9வது தளம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10;

போன்: 26414243;

மவுர்யா இன்டர்நேஷனல்:

168/169. ஆற்காடு சாலை, வடபழனி, சென்னை- 600 026;

போன்: 23650052;

பிரசிடன்ட் ஓட்டல்:

25, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600004;

போன்: 28475661;

ஷெல்டர்:

19, 20, 21, வெங்கடேச அக்ரகாரம், மயிலாப்பூர், சென்னை- 600004;

போன்: 24951919;
www.hotelshelter.com

அம்பா கிறிஸ்டல் இன்:

623, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, சென்னை- 600029;

போன்: 23741999;

தி செந்தூரி சென்டரல்:

26/27, பி.எச்.சாலை, சென்னை- 600 003;

போன்: 25386647;

பீவர்லி ஓட்டல்:

17, ராஜரத்தினம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010;

போன்: 26612772;

தி அம்பாசடர் பல்லவா:

53, மான்டீத் சாலை, சென்னை- 600008;

போன்: 28554476;

அசோக் ரெசிடன்சி:

1/460, பரங்கிமலை- பூந்தமல்லி சாலை, அய்யப்பன்தாங்கல், சென்னை- 600056;

போன்: 24761137;
www.hotelashokresidency.com

தி ரெசிடன்சி

49, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை- 600 017;

போன்: 112 2825 3434;
www.theresidency.com

அருணா ஓட்டல்

144, ஸ்டெர்லிங் சாலை, சென்னை- 600 034;

போன்: 2825 9090;

ஜிஆர்டி கிராண்ட டேஸ்

120. சர்.தியாகராஜர் சாலை, பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017;

போன்: 2815 0500;
www.grthotels.com

thanks to dinamalar

1 comment:

  1. "சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது."

    இந்த புள்ளி விவரம் தமிழ் நாடு முழுவதற்கும் என எண்ணுகிறேன். சென்னையின் மக்கள் தொகை நீங்கள் குறிப்பிட்டது போல் அல்ல. எனினும் நல்ல பதிவு.

    ReplyDelete