Monday, June 06, 2011

நீங்களே தெரிந்து கொள்ளலாம் - SELF TESTING


நீங்களே தெரிந்து கொள்ளலாம்ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்துகுற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.

உங்களுக்காகவே இதோபத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கானஉங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டிஅதற்கான முடிவைஅதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

அ) காலை

ஆ) மதியம், மாலை

இ) இரவு.

2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?

அ) மெதுவாகதலைகுனிந்தபடி

ஆ) வேகமாக

இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக

3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்?

அ) விரல்களை இணைத்துக் கொண்டுஅல்லது கையை பிசைந்தபடி

ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன்.

இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடிபேசுவேன்.

4. நீங்கள் தரையில் அமர்ந்திருக்கும்போதுஎப்படி?

அ) கால்களை நீட்டிக் கொண்டு

ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத்திருப்பேன்.

இ) சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பேன்.

5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

அ) லேசான புன்னகை

ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.

இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.

6. கேளிக்கையில் இருக்கும்போதுஎப்படி?

அ) யாருடனும் பேசாமல்சேராமல் மூலையில் தனித்து இருப்பேன்.

ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன்.

இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.

7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..?

அ) அப்புறம் பார்க்கலாம்நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன்.

ஆ) அவருக்கு என்ன உதவியோஅதையும் நிறைவேற்றாமல்என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன்.

இ) கட்டாயம் உதவி செய்வேன் என்று உறுதி கூறுவேன்.

8. உங்களுக்கு பிடித்த நிறம் எது?

அ) வெள்ளை, பிரவுன் மற்றும் காபி கலர்.

ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச்சை.

இ) கருப்பு

9. படுக்கையில் படுத்திருக்கும்போது எப்படி படுத்திருப்பீர்கள்?

அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்திருப்பேன்.

ஆ) கால்களை நீட்டியபடிகவிழ்ந்து படுத்திருப்பேன்.

இ) மல்லாந்த நிலையில் படுத்திருப்பேன்.

10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு?

அ) சந்தோஷமான கனவு

ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும்.

இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.

என்னங்கஎல்லாத்தையும் படிச்சுஉங்களுக்கான பதிலை `டிக்அடிச்சிட்டீங்களா…?

– 2 மதிப்பெண்

– 4 மதிப்பெண்

– 6 மதிப்பெண்

இப்போது அதற்கான மதிப்பெண்களை கூட்டுங்கள்.

50-க்கும் அதிகமான மதிப்பெண்:

நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!

41-லிருந்து 50- மதிப்பெண் :

உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசியே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக்கல்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பம்அதனால் தடுமாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!

31 -லிருந்து 40-மதிப்பெண்:

நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.

21-லிருந்து 30-மதிப்பெண்:

நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணுதுண்டு ரெண்டுஎன்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

21-க்கும் கீழான மதிப்பெண்:

நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்


நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பரீட்சை

உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

அதற்காக இங்கே சில வினாக்கள்...

1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்?

அ. உற்சாகமாக

ஆ. சோம்பலாக

இ. வெறுமையாக

2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்....

அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன்.

ஆ. லட்சியத்தை மாற்றி விடுவேன்.

இ. மீண்டும் அதே லட்சியத்தை அடைய முயற்சிப்பேன்.

3. `எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் மோசமாக நடக்கிறது' என்று நினைப்பீர்களா?

அ. அவ்வப்போது நினைப்பேன்

ஆ. அடிக்கடி நினைப்பேன்

இ. எப்போதாவது நினைப்பேன்


4. மனநல மருத்துவரின் ஆலோசனை உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?

அ. இல்லை.

ஆ. தேவை தான்.

இ. ஏற்கனவே அவரது உதவியை நாடியிருக்கிறேன்.

5. நீங்கள் உற்சாகமற்று இருப்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

அ. ஆம், அடிக்கடி அதுபற்றி கேட்பார்கள்.

ஆ. சில சமயம் கண்டு பிடிக்கிறார்கள்.

இ. மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

6. உங்கள் உற்சாகம் குறைந்திருக்கிறதா?

அ. ஆம். குறைந்திருக்கிறது.

ஆ. அதிகமாகியிருக்கிறது.

இ. மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.

7. தூக்கத்தைப் பொறுத்தவரை நீங்கள் எப்படி?

அ. படுத்த உடனேயே தூக்கம் வந்துவிடும்.

ஆ. தூக்கம் சுலபத்தில் வராது. வந்தாலும் இடையிடையே விழித்திடுவேன்.

இ. படுத்து அரைமணி நேரமான பிறகுதான் தூக்கம் வருகிறது.

8. படிப்பு அல்லது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா?

அ. ஓரளவு.

ஆ. முடிவதில்லை.

இ. கவனம் செலுத்தி உற்சாகமாக செயல்படுவேன்.

கேள்விகளுக்கான பதில்களை குறித்துக் கொள்ளுங்கள்.

பதில்களுக்கான மதிப்பெண்கள் கீழே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பதிலுக்குமான மதிப்பெண்களை குறித்து கூட்டுத் தொகையை கண்டுபிடியுங்கள். பிறகு நீங்கள் எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்

1. அ. - 0, ஆ. - 5, இ. - 10

2. அ. - 10, ஆ. - 5, இ. - 0

3. அ. - 5, ஆ. - 10, இ. - 0

4. அ. - 0, ஆ. - 5, இ. - 10

5. அ. - 10, ஆ. - 5, இ. - 0

6. அ. - 10, ஆ. - 5, இ. - 5

7. அ. - 0, ஆ. - 10, இ. - 5

8. அ. - 5, ஆ - 10, இ. - 0

உங்கள் மதிப்பெண் 25-க்கும் குறைவு என்றால்...

நீங்கள் மிகவும் உற்சாகமானவர். உங்கள் உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.

25 முதல் 55 வரை என்றால்

உங்கள் மனது அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. உற்சாகத்தை நீங்கள் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி சிந்தியுங்கள். அதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசியுங்கள்.

55-க்கு மேல் என்றால்...

நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுகிறீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உற்சாகமானவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மாற்றங்கள் சாத்தியமே!


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

2 comments:

  1. கூட்டிக்கழிச்சி பார்த்த கணக்கு கரைக்ட்டா வரும்...

    ReplyDelete
  2. i checked that 2 type of test and both are 100% correct for me!

    may i use this article for my blog/magazine?

    ReplyDelete