Thursday, September 01, 2011

காக்கை சனி பகவானின் வாகனமா? ஏன்?.... ஜோதிடத்தில் சனி பகவானை ஆயுள் காரகன் என்று கூறுகிறார்கள்...ஏன்?.. எள் எண்ணெயால் தீபம் ஏற்றுவது ஏன்?...


கண்ணுக்கு தெரியும் கிரகங்களில்(இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் பார்க்கலாம்) மிக மெதுவாகவும் ஒரு சுற்று வர நீண்ட காலம் அதாவது 30 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்...
மேலும் இவருக்கு உகந்த தானியம் எள்ளு ஆகும்....எள் உட்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன் ஆயுளும் கூடும் ஆனாள் பசு நெய் உட்கொண்டால் நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்...

மேலும் காகம் ஆயுள் காரகனான சனி பகவானின் வாகனம் என்கிறார்கள் ...
அந்த காலங்களில் நாம் உண்ணும உணவு சுகாதாரமாக, விஷம் கலக்காமல் உள்ளதா என கண்டுபிடிக்கும் சாதனம் எதுவும் இல்லை...
உறவுகளும் நட்புகளும் கலந்து கொள்ளும் விழாக்களில் விழா நடத்துபவர்களுக்கு வேண்டாதவர்கள் விஷம் கலந்து வைத்தால் கண்டு பிடிக்க முடியாமல் வம்சமே அழிந்து விடும்....இதற்காக முன்னோர்கள் ஏற்படுத்திய விஞ்ஞானபூர்வமான ஏற்பாடே காகத்திற்கு உணவு வைப்பது...
இருக்கும் உயிரினங்களில் தன் இனத்தை அழைத்து உணவருந்துவது காகம் மட்டுமே அவ்வாறு அழைக்கும் காகம் அந்த உணவை தான் மட்டுமே உண்ணும....மற்ற காகங்கள் உண்ணாது...இவ்வாறு உண்ட காகம் மூன்று நிமிடங்களுக்கு மேற்பட்டு உயிருடன் இருந்தால் மற்ற காகங்களும் உண்ணும....விஷம் கலந்திருந்தால் அந்த உணவுண்ட முதல் காகம் மூன்று நிமிடங்களுக்குள் இறந்து விடும் 
ஆக காகத்திற்கு உணவிட்டு அந்த காகம் உயிருடன் இருந்தால் விழா நடத்தும் மனிதர்களும் உணவருந்தலாம்
மனிதர்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் ஆயுள் காப்பதால் காகத்தை ஆயுள் காரகனின் வாகனம் என்கிறார்கள்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment