Friday, February 25, 2011

 இது தான்   ஸ்ட்ரோக்




ஸ்ட்ரோக் – என்பது இந்தியாவில் மரணத்திற்கு 2 வது பொதுவான காரணமாக விளங்குகிறது. 80% ஸ்ட்ரோக் –தடுக்கக்கூடியது . எனவே நீங்களும் தடுக்கலாம் .
ஸ்ட்ரோக் என்பது என்ன ?
ஸ்ட்ரோக் என்பது தீவிரமான மாரடைப்பு போன்றது. சில சமயங்களில் மூளைத்தாக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ட்ரோக் உண்டாக காரணம் என்ன ?
பெரும்பாலும் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது ஸ்ட்ரோக் தோன்றுகிறது. மூளையில் உள்ள மூளைச் செல்கள்  போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இறப்பதாலும் ஸ்ட்ரோக் உண்டாகிறது.


ஸ்ட்ரோக்-இன் வகைகள் :

1.இஸ்கீமிக் ஸ்ட்ரோக் (ischemic stroke)
இரத்தத்தில் உறைகட்டிகள்( BLOOD CLOT ) உண்டாகி இரத்த நாளத்தை தடை செய்வதால் உண்டாகிறது.

2.ஹேமரேஜிக் ஸ்ட்ரோக் (haemorrhagic stroke) இரத்த நாளம் உடைந்து மூளைக்குள் இரத்தம் கசிவதால் உண்டாகிறது. 


ஸ்ட்ரோக் –இன் விளைவுகள் :
ஸ்ட்ரோக்கின் விளைவுகள் பாதிக்கப்பட்ட மூளை திசுவின் அளவைப் பொறுத்ததாகும்.
            அ) வலது பக்கம் மீதான ஸ்ட்ரோக்-இன் விளைவுகள் :
v  உடலின் இடதுபக்கம் பக்கவாதம்.
v  பார்வைக் கோளாறுகள்
v  விரைவான நுண்ணுணர்வு மிக்க நடவடிக்கை நினைவிழத்தல்.
             ஆ) இடது பக்கம் மீதான ஸ்ட்ரோக்- இன் விளைவுகள்:
v  உடலின் வலதுபக்கம் பக்கவாதம்
v  பேச்சு/மொழி பிரச்சினைகள்
v  தாமதமான,எச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கை நினைவிழத்தல்.

ஸ்ட்ரோக் சிகிச்சை அவசரமானது ஏன்?
v  ஒவ்வொரு நொடியும் மிக முக்கியம்
v  நீண்ட நேரம் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடுதல் சேதத்தை அதிகப்படுத்தும்.
v  உள்ளூர் ஆம்புலன்ஸ் சேவையை உடனே பயன்படுத்தவும்.

ஆபத்து காரணிகள் என்ன ?
Ø  ஆபத்து காரணிகள் – மாற்ற முடியாதவை :
·         வயது
·         மரபு (குடும்ப சரித்திரம்) மற்றும் இனம்
·         பாலினம்
·         முந்தைய ஸ்ட்ரோக் , மினி ஸ்ட்ரோக் அல்லது மாரடைப்பு 
Ø  ஆபத்து காரணிகள் – மாற்றக் கூடியவை 
·         உயர் இரத்த அழுத்தம்
·         சிகரெட் பிடித்தல்
·         சர்க்கரை நோய்
·         ஒழுங்கு முறையற்ற இதயத் துடிப்பு
·         அரிவாள் செல் நோய் ( sickle cell disease )
·         அதிக இரத்த கொலெஸ்டெரோல்
·         சத்துக் குறைவான உணவு
·         உடல் பருமன்
 
Ø  குறைவாக அறியப்பட்ட ஆபத்து காரணிகள் 
·         பூகோள அமைப்பு
·         சமூக பொருளாதாரக் காரணிகள்
·         மது மற்றும் போதைக்கு அடிமையாதல்

    ஸ்ட்ரோக் உள்ளதை எவ்வாறு உணர்வது ? அல்லது  அறிவது?

ü  திடீரென பலவீனம் , உடலின் ஒரு பக்கம் ( அ ) முகம், கை (அ) கால் மரத்துப் போதல்.

ü  திடீரென பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு ,குறிப்பாக ஒரு கண்ணில்.

ü  அறிந்த காரணமன்றி திடீரென கடுமையான தலைவலி.

ü  பேச்சு இழப்பு அல்லது பேசுவதில் சிரமம் 

ü  விவரிக்க முடியாத கிறுகிறுப்பு, தள்ளாட்டமான நடை ,
அல்லது கீழே விழுதல் .
 
  ஸ்ட்ரோக் உண்டாவதை நம்மால் எவ்வாறு தாடுக்க முடியும் :
ü  சரியான எடை.

ü  இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மாதிரைகள் தவிர்த்தல் .

ü  உப்பு அளவை குறைக்க வேண்டும்.

ü  உணவில் பொட்டாசியம்அதிகரித்துக்கொள்ள பழங்கள்  மற்றும் காய்கறிகள் சாபிடுதல் .

ü  உடற்பயிற்சி   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

2 comments:

  1. அருமையான இடுகை.. அனைவருக்கும் பயன்படும் இடுகை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு

    ReplyDelete