Wednesday, February 23, 2011

தமிழ் எண்களும் அளவுகளும்

தமிழ் எண்களும் அளவுகளும்
உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏறு முக இலக்கங்கள்
  • 1 = ஒன்று -one
  • 10 = பத்து -ten
  • 100 = நூறு -hundred
  • 1000 = ஆயிரம் -thousand
  • 10000 = பத்தாயிரம் -ten thousand
  • 100000 = நூறாயிரம் -hundred thousand
  • 1000000 = பத்துநூறாயிரம் - one million
  • 10000000 = கோடி -ten million
  • 100000000 = அற்புதம் -hundred million
  • 1000000000 = நிகர்புதம் - one billion
  • 10000000000 = கும்பம் -ten billion
  • 100000000000 = கணம் -hundred billion
  • 1000000000000 = கற்பம் -one trillion
  • 10000000000000 = நிகற்பம் -ten trillion
  • 100000000000000 = பதுமம் -hundred trillion
  • 1000000000000000 = சங்கம் -one zillion
  • 10000000000000000 = வெல்லம் -ten zillion
  • 100000000000000000 = அன்னியம் -hundred zillion
  • 1000000000000000000 = அர்த்தம் -?
  • 10000000000000000000 = பரார்த்தம் —?
  • 100000000000000000000 = பூரியம் -?
  • 1000000000000000000000 = முக்கோடி -?
  • 10000000000000000000000 = மஹாயுகம் -?
இறங்கு முக இலக்கங்கள்
  • 1 - ஒன்று
  • 3/4 - முக்கால்
  • 1/2 - அரை கால்
  • 1/4 - கால்
  • 1/5 - நாலுமா
  • 3/16 - மூன்று வீசம்
  • 3/20 - மூன்றுமா
  • 1/8 - அரைக்கால்
  • 1/10 - இருமா
  • 1/16 - மாகாணி (வீசம்)
  • 1/20 - ஒருமா
  • 3/64 - முக்கால் வீசம்
  • 3/80 - முக்காணி
  • 1/32 - அரை வீசம்
  • 1/40 - அரைமா
  • 1/64 - கால் வீசம்
  • 1/80 - காணி
  • 3/320 - அரைக்காணி முந்திரி
  • 1/160 - அரைக்காணி
  • 1/320 - முந்திரி
  • 1/102400 - கீழ் முந்திரி
  • 1/2150400 - இம்மி
  • 1/23654400 - மும்மி
  • 1/165580800 - அணு
  • 1/1490227200 - குணம்
  • 1/7451136000 - பந்தம்
  • 1/44706816000 - பாகம்
  • 1/312947712000 - விந்தம்
  • 1/5320111104000 - நாகவிந்தம்
  • 1/74481555456000 - சிந்தை
  • 1/489631109120000 - கதிர் முனை
  • 1/9585244364800000 - குரல்வளைப்படி
  • 1/575114661888000000 - வெள்ளம்
  • 1/57511466188800000000 - நுண்மணல்
  • 1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
  • 10 கோன் - 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு - 1 அணு
  • 8 அணு - 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் - 1 துசும்பு
  • 8 துசும்பு - 1 மயிர்நுணி
  • 8 மயிர்நுணி - 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் - 1 சிறுகடுகு
  • 8 சிறுகடுகு - 1 எள்
  • 8 எள் - 1 நெல்
  • 8 நெல் - 1 விரல்
  • 12 விரல் - 1 சாண்
  • 2 சாண் - 1 முழம்
  • 4 முழம் - 1 பாகம்
  • 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
  • 4 காதம் - 1 யோசனை
பொன் நிறுத்தல்
  • 4 நெல் எடை - 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி - 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி - 1 பணவெடை
  • 5 பணவெடை - 1 கழஞ்சு
  • 8 பணவெடை - 1 வராகனெடை
  • 4 கழஞ்சு - 1 கஃசு
  • 4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
  • 32 குன்றிமணி - 1 வராகனெடை
  • 10 வராகனெடை - 1 பலம்
  • 40 பலம் - 1 வீசை
  • 6 வீசை - 1 தூலாம்
  • 8 வீசை - 1 மணங்கு
  • 20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
  • 300 நெல் - 1 செவிடு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
  • 5 மரக்கால் - 1 பறை
  • 80 பறை - 1 கரிசை
  • 48 96 படி - 1 கலம்
  • 120 படி - 1 பொதி


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

3 comments:

  1. நல்லதொரு பதிவு தான். ஆனால் நீங்கள் கூறியிருக்கும், இலக்கங்களில் கோடியில் இருந்து மஹாயுகம் வரையிலானவை தமிழ் கிடையாது. தமிழ் என்று எம்மைப் போன்ற வாசகரை குழப்ப வேண்டாம்............ அது தமிழ் தான் என்று அடித்துச் சொன்னால்....... மில்லியனில் இருந்து ஜில்லியன் வரை தமிழ் தான் என்பேன் ........ மற்ற அளவைகள் தமிழ் தான்..........

    ReplyDelete
  2. அருமை எனது மின்னஞ்சல் முகவரிக்கும் ஒவ்வொரு பதிவையும் அனுப்புக

    ReplyDelete
  3. அருமை எனது மின்னஞ்சல் முகவரிக்கும் ஒவ்வொரு பதிவையும் அனுப்புக sathyaasboa@gmail.com

    ReplyDelete